அனேக பக்தருள் ஒரு பக்தரின் பார்வையில்
1970 இறுதியில் என்னுடைய இரத்தினகிரி பயணம் தொடங்கியது. இதன் அடிப்படை ஒரு சுவாமிகளின் ஈர்ப்பினால். அவர் ஒரு எளிமையின் சிகரம், உடல் முழுவதும் விபூதி, தீட்ஷன்யமான மிகவும் ஒளிமிக்க கண்கள், அவரது பார்வை கவனத்தில் கூர்மை மிக்கதாக காணப்பட்டது. சுருங்கச் சொல்லின் அவருடைய பார்வை நம்மை நோக்கும் போது நம்மால் அந்த பார்வையை எதிர்கொள்ள முடியாததாக இருந்தது. அத்தகைய தீட்ஷன்யம் கலந்த அருட்பார்வை. இத்தகையதொரு சுவாமிகளை நான் நேருக்கு நேர் கண்ணுற்றபோது எனது ஆடிநமனதுக்குள் ஏதோ ஒன்று நினைவுபடுத்தியது, நீ தேடிய பொருள் இது தான், உன் தேடலுக்கு இதுதான் முடிவு, அது இங்கு முடிவுற்றது என்றது. சுவாமிகளை இதற்கு முன் நான் பார்த்ததுவும் இல்லை, கேள்வியுறவும் இல்லை இருப்பினும் என் உள் மனது நீ தேடுவது இவர்தான் என்றது.
ஆரம்பகாலங்களில் என்னுடைய வாராந்திரி விடுப்பு நாளான திங்கட்கிழமைகளில் தான் இரத்தினகிரிக்கு வருவதுண்டு. இது காலப்போக்கில் நான் விடுமுறைக்காக ஆவலோடு காத்திருத்தலாக மாறியது. பின்பு எப்பொழுதெல்லாம் வாடீநுப்பு கிடைக்கும் போது இரத்தினகிரி வர ஆரம்பித்தேன். இரத்தினகிரிக்கு வரும் நோக்கம் சுவாமிகளைப் பார்க்க, அது முதன்மை அதன் நிமித்தமாக மலைமேல் உறையும் பாலமுருகனை வணங்குதல் என்பது எனக்கு பழக்கமானது.
நமது சுவாமிகள் ஒரு தனித்துவம் ஏனைய சுவாமிகளைப்போல் அவருக்கு பின்புலமாக ஒரு ஆதீனமோ, மடமோ, குருவோ இல்லை என்பதுதான். நமது சுவாமிகள் இறைவனை தேடியதாக இல்லை, இறைவனே இவரை தேடி மலைமேல் தனது உறைவிடத்திற்கு வரைவழைத்து தனக்கு அடிமையாக்கிக் கொண்டார். ஒரு பழமையான சொல்படி “ஒருவர் பிறப்பிலேயே மேதையாகிறார், ஒருவர் மேதையாக மாற்றப்படுகிறார், ஒருவருக்கு தன்னை அறியாமலேயே மேன்மை திணிக்கப்படுகிறது”. இதில் நமது சுவாமிகளுக்கு மூன்றாவது பரிமாணம் முதன்மையாகிறது, இரண்டாவது அதனை பின் தொடர்கிறது.
இத்தகையதொரு மாற்றம், அதாவது இறைவனுடைய பணி நியமனத்தை பன்முகமாக உயர்த்தி தன்னையும் தனது அடியார்களையும் உன்னத நிலைக்கு உயர்த்தியது நமது சுவாமிகளையே சாரும்
இதன் மூலமாக நாம் அறிந்து கொள்ளவேண்டியது, இறைவனே நமது சுவாமிகளை தேர்ந்தெடுத்தார் தன் கோயில் சீரமைப்புக்காக. அதன் நிமிர்த்தமாக நாம் நமது மன அமைதிக்காகவும், நம்மை மாற்றியமைத்துக்கொள்ள நமது சுவாமிகளை பின்பற்றுவது அவசியமாகிறது.
மலைமேல் இருந்த புராதன அமைப்பை அருபடை வீட்டிற்கு நிகராக மாற்றி அமைக்க சுவாமிகள் திருஉளம் கொண்டார். இத்தகைய சிந்தனையின் காரணமாக சுவாமிகளின் திருக்குளம் அறுமுக கோணமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. இத்தகைய அமைப்பு இந்தியாவிலேயே இல்லை என்றும் கூறலாம்.
இன்று வரை சுவாமிகளின் அடியார்கள், பக்தர்களிடையே நிலவி வரும் சூழல் என்னவென்றால் இரத்தினகிரி வருமுன் சுவாமிகள் இரத்தினகிரியில் உள்ளாரா என வினவி அறிந்த பின்னர் வருகை தரும் பழக்கம் அன்று முதல் இன்றும் உள்ளது.
பாலமுருகனடிமை என்ற சொல்லிற்கு ஏற்ப சுவாமிகள் (மூலஸ்தானம்) கருவறை முதல் படியில் அமர்ந்து அடியார்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். பாலமுருகனையும் பாலமுருகனடிமையும் ஒன்று சேர்ந்து தரிசனம் செடீநுவது என்பது ஒரு மன அமைதியையும் உள்ளார்ந்த திருப்தியையும் தரவல்லதாக அமைகிறது.
ஆரம்பகாலங்களில் நான் சுவாமிகளை தரிசிக்க வரும் போது வெரும் கண்களால் அவர் அருளாசி வழங்குவார், விபூதி பிரசாதம் வழங்குவார். இரத்தினகிரி வருவதை ஒரு வாடிநக்கை முறையாக நான் பின்பற்றிய பின்னர் எனது சிரமங்கள் பிரச்சனைகள் அனைத்தும் சுவாமிகளிடம் விண்ணப்பிக்கும் போது சுவாமிகள் பலகையில் அல்லது காகிதத்தில் எழுதி தருவது என மாறியது.
சுவாமிகள் தனக்கு தாமே விதித்துக் கொண்ட ஒரு தீர்மானம் இரத்தினகிரியை விட்டு எங்கும் செல்லக்கூடாது கோயில் கட்டி கும்பாபிஷேகம் முடியும் வரை என்பது. இதன் காலம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக.
இத்தகையதொரு உறுதி, ஒரு கட்டுப்பாடு, தான் எடுத்த நோக்கத்தை செயலாக்குவதே என்பது சுவாமிகளுடைய மன உறுதிப்பாட்டை தெளிவாக்குகிறது. இது ஏனையோருக்கு ஒரு முன் உதாரணம். இது மற்றவர்களின் உத்திரவின்படியல்ல. தனக்கு தானே நிர்ணயித்துக்கொண்ட ஒரு நிபந்தனை (ளுநடக iஅயீடிளநன).
சுவாமிகளின் சீரிய முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த கோயில் ஒரு பிராத்தனை ஸ்தலமாக மாறியதன் காரணமாக இந்திய வரைபடத்தில் இரத்தினகிரிக்கு ஒரு தனிப்பட்ட குறியீடு உறுவானது மற்றுமல்லாமல் ஐந்நூருக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு வேலை வாடீநுப்பினை நேர்முகமாகவும் ஏனையோருக்கு மறைமுகமாகவும் ஏற்படுத்தியுள்ளார் என்பது ஒரு அறிய சாதனையும் கூட. இது அத்தனையும் ஒரு நபரின் தனிப்பட்ட முயற்சியினால். சுவாமிகள் “முயன்ற வரை இல்லாமல் முடியும் வரை” என்பது ஒப்பற்றது.
இரத்தினகிரிக்கு குடிநீர் வசதி, காவல் நிலையம், தபால் நிலையம், மின் பகிர்மாண நிலையம், வங்கி வசதி, தங்கும் விடுதிகள், ஆராதனை பொருட்கள் விற்பனை கடைகள் மற்றும் உணவக வசதிகள், திருமணங்கள் நடத்த கட்டிடங்கள், முடிகாணிக்கை செலுத்த பிரத்யேக கூடங்கள், அன்றாட அன்னதானம் 300 நபர்களுக்கு மேல் என்று பல வசதிகளை சுவாமிகள் செடீநுதுள்ளார்கள்.
இரத்தினகிரி ஊரக மருத்துவமனை “குறைந்த கட்டணத்தில் நிறைவான நிவாரணம்” கண்புரை அறுவை சிகிச்சை, பல் சம்பந்தமான பிரச்சினைகள், எலும்பு சம்பந்தமான சிகிச்சை, இரத்தம், மலம், மூத்திர பரிசோதனைகள், எக்ஸ்ரே கருவிகள், இதய துடிப்பு அளவிடும் கருவி போன்ற வசதிகள் செடீநுதுள்ளார். சுவாமிகள் தொண்டர்களுக்காக பல்வேறு துறையிலிருந்து மருத்துவ நிபுணர்களை ஞாயிற்றுக் கிழமைகளில் வரவழைத்து பரிசோதனை செடீநுது சிகிச்சை மேற்கொள்ளும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளார்.
கிராமப்புற மக்களின் படிப்பு வசதிக்காக பள்ளி எல்.கே.ஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தப்படுகிறது. இது சுவாமிகளின் “எழுத்தை அறிவித்தவன் இறைவன்” என்றவாறு அமைந்துள்ளது. இங்கு நகர்ப்புற பள்ளியில் உள்ள அத்தனை வசதிகளையும் ஏற்படுத்தி தந்துள்ளார்.
ராமப்புறத்திலிருந்து மாணவர்கள் பள்ளி வந்து செல்ல பேருந்து வசதிகள் இவை அனைத்தும் கோவில் வளர்ச்சியின் காரணம். இவை அத்தனைக்கும் காரியகர்த்தா சுவாமிகளின் தொலைநோக்கு பார்வையும் அவரது செயல்பாடுகளுமே.
இரத்தினகிரியின் சூழல் எப்போதும் ஏதோ ஒரு பணி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். இது நமது சுவாமிகளின் முன்னேற்ற சிந்தனையின் அடிப்படையில் அமைந்தவை.
இத்தகைய கட்டுமாண பணிகளுக்காக சுவாமிகள் எவரையும் உதவிக்காக அணுகுவதைவிட அவரது கருத்தை அறிந்து பக்தர்கள், பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் தாமாக முன் வந்து கொடைகளை அளிப்பவர்கள் அதிகம். இதுவே சுவாமிகளின் உன்னத நோக்கத்தையும் அவரது அயராத மேம்படுத்துதல் ஒன்றே அவரது குறிக்கோள் என்பதை வலியுறுத்துகிறது.
அமெரிக்காவில் நியூயார்க் என்ற நகரத்தை மான்ஹெட்டான் உடன் இணைக்க ஒரு பொறியாளர் தொங்குபாலம் ஒன்றை வரைந்து அதனை செயலாக்கும் படி கூற அப்போதுள்ள ஏனைய பொறியாளர்கள் அத்தகைய முயற்சி பயனளிக்காது என்றும் நிச்சயமாக தோல்வியுறும் என்றும் கூறப்பட்டது.
பொறியாளரின் பாலம் அமைக்கும் திட்டம் செயலாக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் பொறியாளர் வாஷிங்டன் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கிய உடனேயே அவர் ஒரு விபத்தில் இறந்தார். அவரது மகன் அந்த பணியை தொடர்ந்தபோது ஆறுமாத காலத்திற்குள் அவரும் விபத்தில் தன்சுயநினைவை இழந்தார். ஆறு மாதத்திற்குப்பின் அவருடைய கையில் ஆள் காட்டி விரல் மட்டும் அசைய அவரது அந்த விரலை தொட்ட போது விரல் அசைவினால் தன் எண்ணங்களை வெளிப்படுத்தி அவர் மனைவி மூலமாக ஏனைய பொறியாளர்களுக்கு தகவல் தெரிவித்து பாலம் முடிவடைந்து இன்றளவும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது இது ஒரு சகாப்தம் என்றால் அது மிகையாகாது.
இதனை இங்கு குறிப்பிடுவதற்கு, நமது சுவாமிகளும், தான் மௌனமாக இருந்து தன் சைகையாலும், சமிக்ஞைகளாலும் சிறிய குன்றின் மேல் தற்போதுள்ள கோவிலை சுவாமிகள் நிர்மாணித்துள்ளார். இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை மனதில் ஆர்வம், தன்னம்பிக்கை, மனதால் உருவகப்படுத்திய ஒரு தலத்தை நிர்மாணித்தவர் நமது சுவாமிகள் என்பது வெறும் சவாலானது என்றால் அது மிகையாகாது. இதன் நிமித்தமாக பாலத்தையும் நமது திருக்கோவிலையும் உவமையாக எடுத்துக் கொள்கிறோம்.
நமது கோவிலின் கட்டுமாணபணிகளை கண்ணுற்ற முன்னால் ஊ.நு.டீ டிக டு & கூ, ராமகிருஷ்ணன் அவர்கள் நமது சுவாமிகளின் கட்டுமாண பணியின் ஒவ்வொரு நுணுக்கமும் நன்று அறிந்து தெளிந்து செயல்பட்டமையை வெகுவாக பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது சுவாமிகளின் செயல்பாட்டின் மகுடமாக அமைகிறது. தற்போது எந்த ஒரு கோவிலின் சீரமைப்போ அல்லது நமது சுவாமிகளின் மேற்பார்வையிலே அல்லது கலந்தாடீநுவுக்கு பின்னரே. எந்த காரியத்தையும் செவ்வனே செயல்படுத்த சுவாமிகளின் ஈடுபாடு இணையற்றது என்பதற்கு இது ஓர் உதாரணம்.
தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு அவரவர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுவதும், அதற்கு பரிகாரங்கள் கூறுவதும், கவலைகளை களைவதிலும் சுவாமிகளின் பங்கு அளப்பரியது. எழுத்துபூர்வமாக சுவாமிகள் தீர்வு காண்பது என்பது சுவாமிகளின் தனித்துவம் என்பதனையும் தாண்டி அவரது உறுதிப்பாட்டுடன் தீர்வுகாணும் ஆளுமை இங்குள்ள பக்தர்களை தவிர வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்களும் பயனடைகின்றனர். தொலைபேசி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் சுவாமிகளின் இத்தகைய சேவை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
பக்தர்கள் அணுகுவதற்கு அவர் ஓர் எளிமையான தவஞானி மற்றும் ஒரு நண்பனாகவும் ஒரு வழிகாட்டியாகவும் விளங்குகிறார். சுவாமிகளுடைய ஒரு புன்னகை மனதிற்கு மிகவும் தெம்பளிக்கக் கூடியதாகவும் பரவசமாகவும் அமைந்துள்ளது.
எனது குடும்ப நபர்கள் மற்றும் சொந்தங்கள் என்ற முறையில் பத்து பன்னிரெண்டு பேர்களுக்கும் சுவாமிகள் தான், தாடீநு தந்தை குரு வழிகாட்டி மற்றும் கன்கண்ட தெடீநுவம் என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு மூச்சுக்காற்றும் சுவாமிகள் தான் எங்களுக்கு. நான் எனது மகன், பேரன், கொள்ளு பேரன், பேத்தி எல்லோரும் சுவாமிகளின் ஆலோசனை இல்லாமல் எந்த ஒரு செயலையும் செயலாக்குவதில்லை.
நமது சுவாமிகளின் பக்தர் பட்டியலில் நாட்டின் மேன்மக்கள் நிலையிலிருந்து அடிதளம் வரையுள்ளனர். ஆங்கிலத்தில் “ஞநடியீடந கசடிஅ கடிரச நுளவயவநள” என்பது டுநபளைடயவரசந, நுஒநஉரவiஎந, துரனiஉயைசல, ஆநனயை என்பது. இந்த துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் அடிதளம் வரை நமது சுவாமிகளின் பக்தர்கள் உள்ளனர் என்பது அவரது பக்தருள் ஒருவரான எனக்குள் ஒரு பரவசத்தை உணர்கிறேன்.
ஒவ்வொரு பக்தர்களுக்குள்ளும் மனதில் அமைதி, ஒரு திருப்தி என்று வாடிநகிறார்கள்.
“இரத்தினகிரி” – என்ற சொல் என்பது
- அடைக்கலம்
- எனது அனுபவம்
- அதுவே ஒரு மகத்தான உண்மை.
ஞ.ளு.மோகன்
கடைநிலை பக்தருள் ஒருவன்
பெ.சு.மோகன்
கடைநிலை பக்தருள் ஒருவன்